இறையாண்மை...அப்படீன்னா?

இந்திய இறையாண்மையை நினைத்தால் புல்லரிக்குது! ஆஸ்திரேலியாவுல இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டால் உங்களுக்கு கோபம் வருது... ஆஸ்த்ரியாவுல சீக்கிய மதகுருவை கொன்று விட்டால் உங்களுக்கு பொத்துக்கிட்டு வருது... சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏதாவது பிரச்னை என்றால் வரிந்து கட்டிக்கொண்டு பஞ்சாயத்துக்கு போக துடிக்கிறது...அது போக சீக்கியர்களின் மயிரை மறைக்கும் டர்பன் கட்டற உரிமைக்கு ஏதாவது பிரச்னை வந்தா அதுக்கெல்லாம் கொதிக்கிற உங்க ரத்தம் ஏன் தமிழன் "உயிர்" போகும் போது மட்டும் பாழாய்ப்போன இறையாண்மை பத்தி யோசிக்குது... மத்திய அரசே!! நாங்க இந்தியாவுல தான் இருக்கிறோமா...இல்ல தனி நாடா? தனி நாடு கேட்டாலும் தர மாட்டேன்னு சொல்றீங்க? பிரிவினை அப்படின்னு வியாக்கியானம் பேசுறீங்க? சபாஷ் ! உங்க ராஜதந்திரம் ரொம்ப நாளைக்கு தமிழன் மூளையை சலவை செய்து விட்டது... ஆனால் இனி வரும் காலங்களில் தமிழின மக்களின் கோபக்கனல் தெறிக்கும் விழிகளை நீங்கள் எதிர்கொள்ள தயாராகுங்கள்!

தமிழா!! அரசு வண்ணத் தொலைக்காட்சி வாங்கிட்டியா..? ஒரு ரூபா அரிசி வாங்கிட்டியா? உனக்கு இதை விட வேற என்னடா வேணும்? நம்ம இப்படியே இருந்திடலாம். இல்லாட்டி நம்மையும் தேசிய பாதுகாப்பு சட்டத்துல கைது பண்ணிடுவாங்க... சிந்திச்சு செயல் படறது எல்லாம் ராமசாமி (ஈ.வே.ரா) காலத்தோட முடிஞ்சு போச்சு...நமக்கு எதுக்கு அதெல்லாம் என்று மட்டும் இருந்து விடாதே! தமிழன்னு ஒரு இனம் இந்த பூமியில இருந்ததற்கான ஆதாரம் இனி வரும் தலை முறைக்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மூலமா தான் தெரிய வரும்..

Comments

Popular posts from this blog

மன்மத குருக்கள்

தந்தைபெரியாரும் - இராஜகோபாலாச்சாரியாரும்

திமுகவும் ஈழப்போரும்