Posts

Showing posts from September, 2011

கட்டபொம்மன் கொள்ளைக்காரனா ?

“ம க்களுக்கான நீதி” என்ற ஒரு சமூக மாத இதழில் கிருஷ்ணபரையனார் என்பவர் வீரபாண்டிய கட்டபொம்மன் தியாகியா...? கொள்ளைக்காரனா...? என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் மா.பெ.சிவஞான கிராமணியார் அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு பற்றி எழுதும் போது சரியான வீரர்கள் யாரும் கிடைக்காமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். அப்படி தமிழர்கள் யாரையும் பற்றி எழுதாமல் விட்டால் தமிழகத்துக்கு இழுக்கு ஏற்பட்டுவிடுமே என்ற எண்னத்தில் வெள்ளைக்காரனை எதிர்த்த ஒரே காரணத்துக்காக கட்டபொம்மனை வீரனாக்கி எழுதிவிட்டார். இப்படி வெள்ளையனை எதிர்த்தவர்களை எல்லாம் வீரர் என்றால் எத்தனையோ திருடர்களையும், கொல்லையர்களையும் வெள்ளைக்காரர்கள்   தூக்கில் போட்டுள்ளார்கள். அவர்களையும் நாம் சுதந்திர போராட்ட வீரர்கள் என்று எழுதவேண்டியிருக்கும். கிராமணியார் கட்டபொம்மனை நாடகமாக தயாரித்தார். பின்னர் அதை பந்துலு அவர்கள் சினிமாவாக எடுத்தார். சினிமாவின் பிரமாண்டத்தாலும், நடிகர் திலகத்தின் ஈடு இணையற்ற நடிப்பாலும், ஒரு கோழை, வழிப்பறி கொள்ளைக்காரன் வீரனாகிவிட்டான். கட்டபொம்மன் ஒரு வ...

இன்னொரு கிரகம்

Image
திரைப்படம் பெர்லின், செப். 14- ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகள் கிரகங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதிநவீன டெலஸ் கோப் மூலம் விண் வெளியில் ஆய்வு நடத்திய போது பூமியை போன்று மற்றொரு புதிய கிரகம் இருப்பதை கண்டு பிடித்தனர். இது பூமியை விட 3.6 மடங்கு பெரியது. இதை சுற்றி விண்மீன் (நட்சத்திரங்கள்) கூட்டம் உள்ளது. அதற்கு எச்.டி.85512 பி என பெயரிட்டுள்ளனர்.  இந்த கிரகம் பூமியில் இருந்து 36 வெளிச்ச ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இதன் வலது புறம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. எனவே, இங்கு உயிர்கள் வாழ முடியும் என கருதப்படுகிறது. மேலும் இந்த புதிய கிரகத்தின் வெளிப்புற தோற்றம் பாறை போன்று காட்சி அளிக்கிறது. மேகக் கூட்டங்களும் காணப்படுகிறது. ஆகவே இங்கு உயிர் வாழ முடியும் என கருதப்பட்டாலும் கூட தீவிர ஆய்வுக்கு பிறகே இறுதியான முடிவுக்கு வரமுடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்

அவலம் நிறைந்த இலங்கை

  கொழும்பு, செப். 15-   போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் இலங்கை ராணுவ முகாம்களில் 2 லட்சம் தமிழர்கள் தவிக்கின்றனர்.     இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே இறுதிகட்ட போர் நடந்தது. அப்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த தமிழர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர், அவர்கள் அனைவரும் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அகதிகள் முகாம்கள் என அழைக்கப்படும் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டனர்.   போர் முடிந்த பிறகு மீண்டும் அவர்கள் வாழ்ந்த பகுதியில் மறு குடியமர்த்தப்படுவார்கள் என உறுதி அளிக்கப்பட்டது.   ஆனால் போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் அவர்களில் மிக சிலர்தான் மறு குடியமர்த்தப்பட்டுள்ள னர். பெரும்பாலானவர்கள் இன்னும் முள்வேலி முகாம்களில் சிக்கி தவிக்கின்றனர். இவ்வாறு சுமார் 2 லட்சம் தமிழர்கள் தவிப்பதாக தமிழர் தேசிய கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.   இது குறித்து அக்கட்சி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.   அதில், இறுதி கட்ட போர் முடிந்து 2 ஆண...

இன்றைய தி மு க

1   திராவிடர்களுக்கான சகல தேவைகளையும் கழகம் பூர்த்தி செய்துவிட்டபடியால் திமுக என்கிற அதன் பெயரை சோமுக என்று மாற்றம் செய்யவேண்டும். (அதாகப்பட்டது சோனியா முன்னேற்றக் கழகம்)  2   பேரன் பேத்தி, மாமன் மச்சான், கொழுந்தனார் நாத்தனார் தவிர வேறுயாரும் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிக்குப் போட்டியிடக்கூடாது. 3 சினிமா எடுப்பது, பத்திரிகை நடத்துவது, டிவி காட்டுவது தொடங்கி, ஆணுறைக்கான கம்பெனி வரைக்கும் குடும்ப உறுப்பினர்களே நிர்வாக இயக்குனர்களாக இருந்து தமிழ்ப்பண்பாட்டை  மானாட மயிலாட பாணியில் காப்பாற்ற வேண்டும். 4  உண்மை அறியும் சோதனைக் கருவியை பொதுக்குழு வாசலில் பொருத்தி மாநில சுயாட்சி, ஈழ விடுதலை, மீனவர் பிரச்னை, மொழிப் பிரச்னை, இடஒதுக்கீடு பிரச்னை என ‘கண்றாவி’ பிரச்னைகள் குறித்தெல்லாம் இன்னமும் யாரேனும் யோசித்துக் கொண்டிருக்கிறார்களா என்பதைக் கண்டறிந்து அவர்களை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளவேண்டும். 5  மேற்கண்ட நான்கு தீர்மானத்தையும் எதிர்ப்பவர் எவராக  இருந்தாலும் அவர்கள் இனத்துரோகிகள், குடிகெடுக்க வந்த கோடாரிக்காம்புகள் எனத் தீர்மானம் நிறைவேற்றி தமிழகத்த...