Posts

Showing posts from 2014

திருக்குறளைத்தான் தேசிய நூலாக்க வேண்டும்

Image
திருக்குறளைத்தான் தேசிய நூலாக்க வேண்டும் திருக்குறளைத்தான் தேசிய நூலாக்க வேண்டும் வருணபேதம் பேசும் கீதை புனித நூல் அல்ல! குன்னூரில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி Ad by Supreme AdBlocker  |  Close குன்னூர், டிச.9 - பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறளைத்தான் தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமே தவிர, பிறப்பில் பேதம் பேசும் கீதையை அறிவிப்பது ஆபத்தானது என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.  இன்று  (9.12.2014) குன்னூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கேள்வி:  பாஜக விலிருந்து வைகோ வெளியே வந்தது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில்:  இது காலம் தாழ்ந்த முடிவாக இருந்த போதிலும்கூட, வரவேற்கவேண்டிய சிறந்த முடிவு. வைகோ எங்கள் சகோதரர். திராவிட உணர்வு, திராவிடத் தால் எழுந்தோம் என்பதில் எப்போதும், அந்த கொள்கையி லிருந்து மாறாதவர். அரசியல் நிலைப்பாட்டில்பல நேரங்களிலே அவர்களுடைய நிலைநாங்கள் ஏற்கத் தக்கதாக இல்லாவிட்டாலும்கூட, அடிப்படை உறவை யாரும் மறுத்துவிட முடியாது. எனவே, அதை வரவேற் கிறோம். ...

வால்மீகி இராமாயணம்

Image
(இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.) பால காண்டம் பதினான்காம் அத்தியாயம் தொடர்ச்சி ஆரியப் பார்ப்பனர் மயக்கத்தில் எவ்வாறோ அகப்பட்டு மயங்குபவரோ?  அன்றி அவ்வகுப்பினரில் ஒருவரோ இச்சாமிநாதன்?  மேலே நாம் கூறியுள்ள மொழி பெயர்ப்பாளர் நால்வரில் அநந்தாச்சாரியாரும் சீனிவாசய்யங்காரும் வைணவ சமயத்தினர்.  மற்றிரு வரும் ஆரியரே.  இவர்கள் எல்லோரும் அகலிகை சோரம் போனமையையும் தசரதன் தன் பத்தினி...

இந்தியப் பொருளாதாரம் - பெரியார்

Image
இந்தியப் பொருளாதாரம் சகோதரர்களே! பொருளாதாரம் என்கின்ற வார்த்தை நம் நாட்டில் தற்காலம் உள்ளதுபோல் முன் காலத்தில் இருந்ததாகச் சொல்ல முடியாது. முன் காலத்தில் எல்லாம் பொருளை உடைத்தாயிருக்கவும், பணம் காசாய் கையாளவும் சிலருக்கே உரிமை இருந்தது. மற்றவர்களுக்கு தானியம் தவிர, வேறு ஒன்றும் பெற உரிமை கிடையாது. நாட்டு வழக்கிலும் பணம் காசு புழக்கமும் கிடையாது. எல்லா வாழ்க்கையும் பண்டமாற்றை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும். ஒரு பண்டத்தைக் கொடுத்து மற்றொரு பண்டத்தை வாங்கிக் கொள்ளுவார்கள். கைத்தொழில்காரர்கள், கூலியாள்கள், ஏவலாளர்கள் எல்லோருக்கும் தானியமே கொடுப்பது வழக்கம். மந்திரிகளுக்கும் அரசன் பூமி மானியம் விடுவதே தவிர, பணமாக எதுவும் கொடுப்பதில்லை. எனக்குத் தெரிய 40, 50 வருஷங்களுக்கு முன் வேஷ்டி கொடுப்பவன், உலோகப் பாத்திரம் கொடுப்பவன், நகை செய்து கொடுப்பவன், தோட்டங்களுக்கு கலப்பை ஏர் செய்து கொடுப்பவன், செருப்புத் தைத்துக் கொடுப்பவன். சுவர் வைப்பவன் முதலியவர்கள் எல்லோரும் தானியம்தான் வாங்கிக் கொள்ளுவார்கள். சில ஆட்களுக்கு வருஷத்திற்கு இவ்வளவு என்று இருக்கும். பெருத்த மிரா...