Posts

Showing posts from December, 2011

முல்லை பெரியார்

முல்லைப் பெரியாறு பற்றி அகில இந்திய அளவில் புயலைக் கிளப்பிவிட்டு – தமிழ் நாட்டை பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேச வைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர். மீடியாக்களில்,டெல்லியில், அகில இந்திய அளவில் கேட்கிறார்கள் -பலமாகக் கேட்கிறார்கள் ! “116 வருட சுண்ணாம்பு அணை – இன்னும் எவ்வளவு நாள் தாங்கும் ? தங்கள் இடத்திலேயே - தங்கள் செலவிலேயே - புதிய அணையைக் கட்டி, தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக கேரளா சொல்கிறதே – ஒப்பந்தம் எழுதிக் கொடுக்கிறோம் என்கிறார்களே. இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது ? இது என்ன வீண் பிடிவாதம் ? இது என்ன பைத்தியக்காரத்தனம் ?” இங்கு தான் தமிழ்நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது. கேரளா இதுவரை செய்த அநியாயங்கள், புதிய அணை கட்டி இனி செய்ய உத்தேசித்திருக்கும் அயோக்கியத்தனங்கள் - இவை எதுவுமே வெளி உலகுக்குத் தெரியவில்லை. ஏன் தமிழ் நாட்டிலேயே – சென்னையிலேயே கூட, படித்தவர்கள் பலருக்கு கூட தெரியவில்லை ! புதிய அணை கட்டுவதில் என்ன தவறு ? -அதான் அதே அளவு தண்ணீர் தருகிறேன் என்கிறார்களே என்று தமிழர்களே கேட்கிறார்கள். தமிழ் நா...

n s கிருஷ்ணன்

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தமது 49வது வயதில் 30.8.1957 அன்று மரணம் அடைந்தார். அவருடைய கடைசி படமான "அம்பிகாபதி" (சிவாஜி, பானுமதி நடித்தது) அவர் மறைவுக்குப்பின் வெளிவந்தது.   என்.எஸ்.கிருஷ்ணன், அவர் மறையும் வரை படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார்.   எம்.ஜி.ஆரின் மிகப் பெரிய வெற்றிப்படமான மதுரை வீரனில் என்.எஸ்.கிருஷ்ணனும், டி.ஏ.மதுரமும் நடித்தனர். ஜெமினி கணேசன்  சாவித்திரி நடித்த "யார் பையன்" படத்திலும் இந்த ஜோடி நடித்தது. ஏ.எல்.சீனிவாசன் தயாரிப்பில் சிவாஜி கணேசன் , பானுமதி நடித்த "அம்பிகாபதி" படத்தில் என்.எஸ்.கே. நடித்துக் கொண்டிருந்த நேரம்.   அப்போது (1957 ஆகஸ்டு) அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்து, கலைவாணர் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். அதற்கு தீவிர சிகிச்சை அளித்தனர். கலைவாணர் குணம் அடைந்து வருவதாகவும், 10 நாட்களில் வீடு திரும்பி விடுவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.   ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், ஆகஸ்டு 29_ந்தேதி அவர் உடல்நிலை மோசம் அட...