Posts

Showing posts from 2013

பகுத்தறிவு

Image
கடவுளை மற; மனிதனை நினை என்பதற்கு இதோ இரண்டு எடுத்துக்காட்டுகள்! கடவுளை மற மனிதனை நினை என்பதற்கு பொருத்தமான எடுத்துக்காட்டுகள்! திட்டமிட்ட மனித முயற்சியால் ஃபாலின் புயல்  கொடுமையிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட்டனர் பக்தி மூடநம்பிக்கையால் ம.பி.யில் 120-க்கும் மேற்பட்டோர் பலி! கடவுளை மற மனிதனை நினை என்பதற்கு இவ்விரண்டும் பொருத்தமான எடுத்துக்காட்டுகள்! தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை ஒடிசாவின் கடும் புயலிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட்டது மனிதர்களின் முயற்சி; மத்தியப் பிரதேசத்தில் கோயில் திருவிழாவில் 120-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் - முன்னது மனித முயற்சியால் மனித உயிர்கள் காப்பாற்றப் பட்டன; பின்னது கடவுள் நம்பிக்கையால் பக்தர்கள் பரிதாபகரமாக மாண்டனர்; கடவுளை மற - மனிதனை நினை என்ப தற்கான எடுத்துக்காட்டுகள் இவை என்று சுட்டிக் காட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:  கடவுளை மற; மனிதனை நினை என்பதற்கு இதோ இரண்டு எடுத்துக்காட்டுகள்! கடந்த 12.10.2013 அன்று மாலை 6 மணியளவில் ஒடிசா  மாநிலம் கோபால்பூர் அருகே வங்கக் கடலி...

நம்ம ஊர் சினிமா

Image
ATTACK THE GAS STATION கொரிய படம் மூடர் கூடத்தின் மூலமா??? கண்ணீர்ச்சில், எச்சில், சிறுநீர் ,விந்து, பீ, போன்றவை மட்டும்தான்  நம் உடம்பில் இருந்து   சொந்தமாக உருவாகுபவை... அது கூட இந்த மானிட உடல் இயங்க எதையாவது தின்னு  தொலைத்தால்தான், இந்த உடல் இயக்கம் பெற்று, மேலே சொன்ன ஐந்து விஷயங்கள் உடம்பில் இருந்து வெளியேற  வாய்ப்பு இருக்கின்றது.. மற்றபடி இந்த உலகில்   வாழ  அனுபவங்கள் மற்றும்  யாரோ சொல்லிக்கொடுத்து விட்டு போன பாடங்களை படித்து உள்வாகி நாம்  அதை மேம்படுத்தி  மேம்படுத்தி வாழ்கின்றோம்....சிக்னலில்  எப்படி  கிராஸ்  பண்ணுவதில் இருந்து ஆய் போனால் எப்படி சுத்தமாக கழுவி விட்டு வருவது வரை அம்மாவில் இருந்து அப்பாவரை நமக்கு  சொல்லிக்கொடுத்ததுதான்...எப்படி உடுத்த வேண்டும் ?எப்படி பழக வேண்டும்? என்று சொல்லிக்கொடுக்க  அதை அப்படியே பாலோ பண்ணி வருகின்றோம்... சரி... இப்படி கத்துக்கிட்டு  படிச்சி வரோம்....கிராமத்துல இருந்து சென்னை வந்துட்டிங்க... ஒரு மாலுக்கு போறிங்க.. அங்க எக்ஸ்சலேட்டர் இருக்கு...

தந்தைபெரியாரும் - இராஜகோபாலாச்சாரியாரும்

Image
தந்தைபெரியாரும் - இராஜகோபாலாச்சாரியாரும் நடந்த விஷயம் என்ன? ஈ.வெ.ரா. சி.ஆர். சந்திப்பு தோழர் சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் நானும் குற்றாலத்தில் கண்டு பேசிய விஷயம் தமிழ்நாடு பத்திரிகை உலகத்தில் மிகப் பிரமாதப் படுத்தப்பட்டு விட்டது. என்னைச் சந்திக்கும் ஒவ்வொருவரும் முதலில் இந்த விஷயத்தை கேட்டு விட்டே மரியாதைக்கு விசாரிக்கும் க்ஷேம லாபங்களைக் கூட விசாரிக்கிறார்கள். சந்திக்க முடியாத அனேகம் பேர்கள் உள்ளத்திலும் இந்த எண்ணமே இருக்கும் என்பதில் ஆக்ஷேபணை இருக்க நியாயமில்லை. ஆகையால் அதை விளக்கி விடுகிறேன். பத்திரிகை நிருபர்கள் பலர் என்னை விசாரித்தார்கள். நான் அது ஒன்றும் அவ்வளவு முக்கியமானதல்ல என்றே பதில் சொல்லிவிட்டேன். நிருபர்கள் சேதியில் 100க்கு 90 என் விஷயத்தைப் பொறுத்தவரை திரித்தும் பிசகாயும் மாற்றியுமே எனக்கு காணப்படுகின்றன. ஆதலால் நானே குறிப்பிட்டு விடுகிறேன். எங்கள் சம்பாஷணை ஒன்றும் உண்மையிலேயே அவ்வளவு குறிப்பிடக்கூடிய தல்ல. ஆனால் கவனிக்கக்கூடியதேயாகும். எனக்கு பொதுவாக தோழர் சி.ராஜகோபாலாச்சாரியாரிடம் எப்போதுமே மரியாதை உண்டு. அவருக்கும் என்னிடம் அன்பு உண்டு என்றே கருதிக் ...

அ.இ.அ.தி.மு.க. ஆட்சி ஈராண்டு சாதனைகள்தான் என்ன... என்ன?

Image
அ.இ.அ.தி.மு.க. ஆட்சி ஈராண்டு சாதனைகள்தான் என்ன... என்ன? ஈராண்டு சாதனைகள்தான் என்ன... என்ன? அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இரண்டாண்டுகளைக் கடந்து வந்துள்ளது; ஏடுகளில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் - சட்டப் பேரவையில் பாராட்டுக் குவியல்கள். இவற்றையெல்லாம் குறையாகச் சொல்ல முடியாது. எந்த ஆட்சியிலும் பொதுவாக இவையெல்லாம் நடக்கக் கூடியவைதான். வேண்டுமானால் திகட்டக் கூடியதாக இது இருக்கிறது என்று விமர்சிக்கலாம். சட்டமன்றத்தில் குறைகளை சுட்டிக்காட்ட எந்த எதிர்க்கட்சியாலும் முடியவே முடியாது. எதிர்க்கட்சிகளை சட்டப் பேரவையில் இருக்க அனு மதித்தால்தானே அவர்களால் பேச முடியும்? அப்படியே அவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச ஆரம்பித்தால் ஆயிரம் ஆயிரம் குறுக்கீடுகள்; அதையும் மீறி குறை கூறினால் அவை அவைக் குறிப்பில் இடம் பெறாது. சட்டசபையில் 110ஆவது விதி என்பது மிகவும் அரிதாகப் பயன் படுத்தப்படுவது; அதன்கீழ் அறிக்கையை முதல் அமைச்சர் படித்தால் அது குறித்து யாரும் எதிர்த்து பேசக் கூடாது - விமர்சனங்களை வைக்க முடியாது, - குறைகூறிப் பேச முடியாது. இதனை இலாவகமாகப் பயன் படுத்தியதில் இன்றைய ம...

சைவம் பேசும் ஓநாய்!

Image
ஒன்றுபட்ட இலங்கையில்தான் தமிழர்கள் வாழ விரும்புகிறார்களா? சைவம் பேசும் ஓநாய்! ஓநாய் சைவம் பேசினாலும்கூட ஏற்றுக் கொள்ளலாம்; ராஜபக்சே தமிழர்களுக்காக ஆதரவு காட்டிப் பேசுவதை மட்டும்  ஏற்றுக் கொள்ளவே முடியாது. விடுதலைப்புலிகளை போரில் வீழ்த்திய தாகக் கூறி நான்காம் ஆண்டு வெற்றித் திருநாள் கொழும்பில் கொண்டாடப்பட்டுள்ளது (18.5.2013). அந்த நிகழ்ச்சியில் அதிபர் ராஜபக்சே மிகவும் நீட்டி முழங்கியுள்ளார்.  ஒன்றுபட்ட இலங்கையில்தான் தமிழர்கள் அமைதியுடன் வாழ விரும்புகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஈழத் தமிழர்கள் எல்லாம் நீண்ட வரிசையில் நின்று இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் மனு கொடுத்திருப்பார்களோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது. பேரழிவுக்குப்பிறகு அங்கு வாழும் தமிழர்கள் ஒன்றுபட்ட இலங்கையில்தான் வாழ வேண்டும் என்று நினைப்பதற்கு, மறு சிந்தனை கொள் வதற்கு  உகந்த வகையில் அதிபர் ராஜபக்சே அப்படி என்ன என்னவெல்லாம் தமிழர்களின் அமைதிக்கும், சுதந்திரமான வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் செய்துள்ளார் என்பதைப் பட்டியல் போட்டுக் காட்டியிருந்தால்கூட, ஏதோ தம் பக்கம் நியாயம்...

மறைந்த தேவ கானம்

Image
| திங்கட்கிழமை, 15, ஏப்ரல் 2013 (10:36 IST) காதலை வளர்த்து, கண்ணீரை துடைத்த குரல்! பி.பி.ஸ்ரீனிவாஸ் மறைவுக்கு வைரமுத்து அஞ்சலி!   பி.பி.ஸ்ரீனிவாசின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, அரை நூற்றாண்டாக ரசிகர்களின் காதலை வளர்த்த குரல், கண்ணீரை துடைத்த குரல் பாடுவதை நிறுத்திக்கொண்டது என்று கூறி உள்ளார். பழம் பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாசின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:- காதலை வளர்த்த குரல் அரை நூற்றாண்டாக ரசிகர்களின் காதலை வளர்த்த குரல்; கண்ணீரை துடைத்த குரல் இன்று முதல் பாடுவதை நிறுத்திக்கொண்டது. பி.பி.ஸ்ரீனிவாசின் குரல் வித்தியாசமான குரல். மழையில் நனைந்து வரும் காற்றாக சில்லிட்டு பரவும் தேன் குரல். மனதின் சந்து பொந்துகளை சலவை செய்யும் குரல். அதில் காதலின் லயமும் இருக்கும்; சோகத்தின் சுகமும் இருக்கும். காற்றோடு வாழும் காலங்களில் அவள் வசந்தம், ரோஜா மலரே ராஜகுமாரி, மவுனமே பார்வைய...