Posts

Showing posts from 2015

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரை

Image
பெண்கள் இரண்டு வரத்துக்கு மேல் கேட்கக் கூடாதாம்! இதுதான் மகாபாரதம் காட்டும் தருமம்! பெண்கள் இரண்டு வரத்துக்கு மேல் கேட்கக் கூடாதாம்! இதுதான் மகாபாரதம் காட்டும் தருமம்! சென்னை சிறப்புக் கூட்டத்தில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரை சென்னை, ஜன. 6- பெண்கள் இரண்டு வரத்துக்கு மேல் கேட்கக் கூடாது என்று மகாபாரதம் காட்டும் தருமம் பற்றி கேள்வி எழுப்பினார் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள். 12.12.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதா? என்ற தலைப்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை யின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு: பாவ யோனியில் பிறந்த பெண்கள், வைசியர்கள், ஏவலர்கள் 9 ஆவது இயலினுடைய 32 ஆவது பாடல் சொல்லு கிறது; கிருஷ்ணன் சொல்கிறார்: யாருக்கெல்லாம் நான் என்னிடத்தில் அடைக்கலம் கொடுத்து, அவர்களை உயர்ந்த இடத்திற்கு அழைத்துக் கொண்டு போவேன் என்றால், பாவ யோனியில் பிறந்த பெண்கள், வைசியர்கள், ஏவலர்கள் (சூ...

கீதை இந்து மதத்திற்கான நூல் இல்லை அது பார்ப்பனர்களுக்கான நூல்

Image
கிருஷ்ணன் லீலைகளை தேசிய விளையாட்டுகளாக அறிவிப்பார்களா? கிருஷ்ணன் லீலைகளை தேசிய விளையாட்டுகளாக அறிவிப்பார்களா? சென்னை சிறப்புக் கூட்டத்தில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கேள்வி சென்னை, ஜன. 5- கிருஷ்ணன் லீலைகளை தேசிய விளையாட்டுகளாக அறிவிப்பார்களா? என்ற கேள்வியை எழுப்பினார் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள். 12.12.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதா? என்ற தலைப்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை யின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு: தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே, இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தோழர் தா.பாண்டியன் அவர்களே, எழுச்சித் தமிழர் நண்பர் தொல்.திருமாவளவன் அவர்களே, பேராசிரியர், நண்பர் அருணன் அவர்களே, கவிஞர் கலிபூங்குன்றன் அவர் களே, அரங்கில் அமர்ந்திருக்கின்ற பல்துறை சான்றோர்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கிருஷ்ணனின் விளையாட்டுகளையும், ...