Posts

Showing posts from 2017

மெரினா புரட்சி

Image
மெரினா புரட்சி! சல்லிக்கட்டுக்கான மாணவர்கள் , இளைஞர்களின் போராட்டம் நிறைவுபெற்று விட்டதா , மேலும் தொடருமா என்று உறுதியாகத் தெரியாத சூழலில் இதனைப் பதிவிடுகின்றேன். கிடைத்திருப்பது முழு வெற்றியில்லை ,  முதல் வெற்றிதான் என்று போராட்டக் களத்திலிருந்து மாணவர்கள் சிலர் கூறுவதைக் கேட்க முடிந்தது. உண்மைதான். ஆனாலும் கிடைத்துள்ள முதல் வெற்றி அவ்வளவு எளிதானதன்று. மக்களின் கோரிக்கையை மதித்தும் ,  ஏற்றும் இவ்வளவு குறுகிய நாளில் ஓர் அவசரச் சட்டம் ,  இதற்கு முன் இயற்றப்பட்டுள்ளதாகத்   தெரியவில்லை .   பெற்றுள்ள வெற்றியைக் கொண்டாடுவதும் , அடுத்த முழு வெற்றியை நோக்கி நகர்வதுமே இன்றைய சூழலில் சரியானதாக இருக்க     முடியும். இல்லையில்லை ,  இறுதி வெற்றி பெரும் வரையில் போராட்டம் தொடரும் என்பது நடைமுறைச் சிக்கல்களைக் கொண்டது. இறுதி வெற்றி அல்லது நிரந்தரத் தீர்வு என்று அவர்கள் குறிப்பிடுவது சட்டத் திருத்தமாகவே இருக்க முடியும்.   1960 ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்புச்   சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவதே இளைஞர்கள் வேண்டும் இற...