மறைந்த தேவ கானம்
| திங்கட்கிழமை, 15, ஏப்ரல் 2013 (10:36 IST) காதலை வளர்த்து, கண்ணீரை துடைத்த குரல்! பி.பி.ஸ்ரீனிவாஸ் மறைவுக்கு வைரமுத்து அஞ்சலி! பி.பி.ஸ்ரீனிவாசின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, அரை நூற்றாண்டாக ரசிகர்களின் காதலை வளர்த்த குரல், கண்ணீரை துடைத்த குரல் பாடுவதை நிறுத்திக்கொண்டது என்று கூறி உள்ளார். பழம் பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாசின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:- காதலை வளர்த்த குரல் அரை நூற்றாண்டாக ரசிகர்களின் காதலை வளர்த்த குரல்; கண்ணீரை துடைத்த குரல் இன்று முதல் பாடுவதை நிறுத்திக்கொண்டது. பி.பி.ஸ்ரீனிவாசின் குரல் வித்தியாசமான குரல். மழையில் நனைந்து வரும் காற்றாக சில்லிட்டு பரவும் தேன் குரல். மனதின் சந்து பொந்துகளை சலவை செய்யும் குரல். அதில் காதலின் லயமும் இருக்கும்; சோகத்தின் சுகமும் இருக்கும். காற்றோடு வாழும் காலங்களில் அவள் வசந்தம், ரோஜா மலரே ராஜகுமாரி, மவுனமே பார்வைய...