மெரினா புரட்சி



மெரினா புரட்சி!


சல்லிக்கட்டுக்கான மாணவர்கள்,இளைஞர்களின் போராட்டம் நிறைவுபெற்று விட்டதா,மேலும் தொடருமா என்று உறுதியாகத் தெரியாத சூழலில் இதனைப் பதிவிடுகின்றேன். கிடைத்திருப்பது முழு வெற்றியில்லைமுதல் வெற்றிதான் என்று போராட்டக் களத்திலிருந்து மாணவர்கள் சிலர் கூறுவதைக் கேட்க முடிந்தது. உண்மைதான். ஆனாலும் கிடைத்துள்ள முதல் வெற்றி அவ்வளவு எளிதானதன்று. மக்களின் கோரிக்கையை மதித்தும்ஏற்றும் இவ்வளவு குறுகிய நாளில் ஓர் அவசரச் சட்டம்இதற்கு முன் இயற்றப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. 


பெற்றுள்ள வெற்றியைக் கொண்டாடுவதும்,அடுத்த முழு வெற்றியை நோக்கி நகர்வதுமே இன்றைய சூழலில் சரியானதாக இருக்க   முடியும். இல்லையில்லைஇறுதி வெற்றி பெரும் வரையில் போராட்டம் தொடரும் என்பது நடைமுறைச் சிக்கல்களைக் கொண்டது. இறுதி வெற்றி அல்லது நிரந்தரத் தீர்வு என்று அவர்கள் குறிப்பிடுவது சட்டத் திருத்தமாகவே இருக்க முடியும். 

1960ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவதே இளைஞர்கள் வேண்டும் இறுதித் தீர்வாக இருக்கலாம். அதனை எட்டுவதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் கண்டிப்பாக ஆகும். சட்டத் திருத்த முன்வடிவம்,நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டும். அந்த நடைமுறை ஓரிரு நாள்களில்அவசரச்  சட்டம் இயற்றுவது போல முடிந்துவிடக் கூடியது இல்லை.  அவ்வளவு நாள்கள் அத்தனை  பேரும்  தங்கள் படிப்புவேலை எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் போராட்டக் களத்திலேயே இருப்புக் கொள்வது இயலக்கூடியதா என்பதை இளைஞர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நாள்கள் ஓடும்போதுபோராட்டத்தின் வீச்சு குறைவதற்கும்கூடியிருப்போர் மெல்லக் கலைவதற்கும் வாய்ப்புகள் உண்டு. எனவே உரிய நேரத்தில் உரிய முடிவை எடுப்பதே விவேகம். 

மாணவர்களின் போராட்டத்தை மழுங்கடிப்பதற்காக இப்படி நான் எழுதுவதாக ஒரு சிலர் கூறக்கூடும். 'தமிழ்த் துரோகிபட்டத்தைக் கூட சிலர் வழங்கக்கூடும்.. அது குறித்தெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால்உண்மை பேச முடியாது. நான் ஒன்றும் சல்லிக்கட்டு ஆதரவாளன் இல்லை.  'ஏறு தழுவுதல்நம் பழந்தமிழ்ப் பண்பாடுதான் என்றாலும்இன்றைய யுகத்திற்கு அது பொருந்துமா என்ற எண்ணம் உடையவன்தான்.ஆனாலும் இளைஞர்களின் போராட்ட உறுதியையும்,ஒழுங்கையும் கண்டு வியந்தேன். அந்த "மெரினா புரட்சிவெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இக்கருத்தைப் பதிவு செய்கின்றேன்.

போற்றுவோர் போற்றட்டும்புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும்!


Comments

Popular posts from this blog

மன்மத குருக்கள்

தந்தைபெரியாரும் - இராஜகோபாலாச்சாரியாரும்

திமுகவும் ஈழப்போரும்