இன்றைய தி மு க

1   திராவிடர்களுக்கான சகல தேவைகளையும் கழகம் பூர்த்தி செய்துவிட்டபடியால் திமுக என்கிற அதன் பெயரை சோமுக என்று மாற்றம் செய்யவேண்டும். (அதாகப்பட்டது சோனியா முன்னேற்றக் கழகம்)
 2   பேரன் பேத்தி, மாமன் மச்சான், கொழுந்தனார் நாத்தனார் தவிர வேறுயாரும் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிக்குப் போட்டியிடக்கூடாது.
3 சினிமா எடுப்பது, பத்திரிகை நடத்துவது, டிவி காட்டுவது தொடங்கி, ஆணுறைக்கான கம்பெனி வரைக்கும் குடும்ப உறுப்பினர்களே நிர்வாக இயக்குனர்களாக இருந்து தமிழ்ப்பண்பாட்டை  மானாட மயிலாட பாணியில் காப்பாற்ற வேண்டும்.
4  உண்மை அறியும் சோதனைக் கருவியை பொதுக்குழு வாசலில் பொருத்தி மாநில சுயாட்சி, ஈழ விடுதலை, மீனவர் பிரச்னை, மொழிப் பிரச்னை, இடஒதுக்கீடு பிரச்னை என ‘கண்றாவி’ பிரச்னைகள் குறித்தெல்லாம் இன்னமும் யாரேனும் யோசித்துக் கொண்டிருக்கிறார்களா என்பதைக் கண்டறிந்து அவர்களை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளவேண்டும்.
5  மேற்கண்ட நான்கு தீர்மானத்தையும் எதிர்ப்பவர் எவராக  இருந்தாலும் அவர்கள் இனத்துரோகிகள், குடிகெடுக்க வந்த கோடாரிக்காம்புகள் எனத் தீர்மானம் நிறைவேற்றி தமிழகத்தை விட்டு பார்வதியம்மாள் பாணியில் நாடுகடத்தப்பட வேண்டும்.இன்றைய 

Comments

Popular posts from this blog

மன்மத குருக்கள்

தந்தைபெரியாரும் - இராஜகோபாலாச்சாரியாரும்

திமுகவும் ஈழப்போரும்