இலங்கை முஷ்ராப்ப் ponsegaa

சரத் பொன்சேக நேற்று வரை ராணுவ உடையில் வலம் வந்து கொண்டு இருந்த இலங்கை முப்படை தளபதி தற்போது வெள்ளை உடை அணிந்து அரசியல் அவதாரம் எடுத்து இருக்கிறார் விடுதலை புலிகளையும் ஈழ தமிழர்களையும் ஒரே குழியில் போட்டு புதைத்த உன்னத வீரர் என்று சிங்களர்கள் அவரை போற்றி புகழ்த்து கொண்டு இருக்கிறார்கள் இதுதான் இந்த புகழ்ச்சி நிறைத்த வார்த்தைகள் கொடுத்த நம்பிக்கைதான் அவரை அரசியலுக்கு அழைத்து வந்திருகிறதுஉண்மையில் அவருக்கு அரசியல் ஆர்வம் கிடையாது என்று சொல்ல முடியாது அந்த ஆர்வத்தை வெளி கொண்டு வந்த புண்ணியம் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவையே சேரும் விடுதலை புலிகளுக்கு எதிரான ராஜபக்ஷே பொன்சேக கூட்டணி வெற்றி பெற்றது வெற்றியின் பரிசாக போன்செகவுக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டது பதவி உயர்வின் நட்பு வலு பெரும் என்று நினைத்தால் விரிசல் தான் அதிகம் ஆனது ஏனென்றால் பழைய பதவியில் தனி காட்டு ராஜாவாக இருந்த பொன்சேக புப்பெரும் தளபதியாக பதவி ஏற்ற பிறகு கோதாபயவின் கீழ் பொம்மை போல் பணி புரிய வேண்டிய நிலைஇலங்கை ராணுவத்தின் இணைய தளத்தில் பொன்சேகா வின் பெயர் இருட்டடிப்பு செய்ய பட்டு வருகிறது மாறாக கோதாபயவின் பெயருக்கு அதிக வெளிச்சம் தரப்பட்டது இராணுவம் தொடர்பான செய்திகளில் கோதாபயவின் பெயருக்கு முக்கிய துவம் கொடுக்கப்படுகிறது பொன்சேகாவின் பெயருக்கு களங்கம் விளைவிப்பது போல் பாகிஸ்தானில் ராணுவ புரட்சி ஏற்பட்டது போல் இங்கேயும் ராணுவ புரட்சி ஏற்படலாம் என்று சொல்லி கொண்டு திரிகின்றனர்போதாகுறைக்கு அவருக்கு பாது காப்பு வழங்கி கொண்டுஇருந்த வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது அவர்களும் தனக்கு நெருக்கமானவர்கள் இல்லை என்ற காரணத்தால் தந்து உயிருக்கு ஆபத்து வந்து விடும் என்று கருதினார் எல்லாம் சேர்த்து அவரை கோபத்தில் ஆழ்த்தியது இதனால் அதிபருக்கு கடிதம் எழுதினார் "இலங்கையில் குற்றவாளிகள் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களால் என்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும் தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும் அந்த கடிதத்தில் இருந்தது " இதனால் இலங்கை அரசியல் மீண்டும் சூடு பிடித்து கொண்டதுஅதிபர் தேர்தலில் பொன்சேகா ரணில்வுடன் கூட்டணி வைத்து வெற்றி பெரும் வாய்ப்பு உள்ள்ததாக இலங்கை வட்டாரம் சொல்கிறதுரணிலின் தொண்டர் பலமும் பொன்சேகாவின் இமேஜும் அவர்கலுக்கு வெற்றியை தேடி தரும் என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்"தேர்தலின் வெற்றி தோல்விகள் உங்களை போன்ற பாவிகளை ஒன்றும் செய்யா விட்டாலும் எங்கள் ஈழ மக்களின் ஆத்மாக்கள் உங்களை போன்றவர்களை ஒரு போதும் மன்னிக்காது "

Comments

Popular posts from this blog

மன்மத குருக்கள்

தந்தைபெரியாரும் - இராஜகோபாலாச்சாரியாரும்

திமுகவும் ஈழப்போரும்